இதயத்தின் ஏக்கம்
நித்திரையில் தொலைத்த - என் நிஜங்களைத் தேடி நாளெல்லாம் அழுகிறேன் - என் நெஞ்சம் வாடி... உள்ளக் குளத்தில் கல்லெறிந்து உண்மைக் கருத்தைக் களவாடி உலகக் கழிப்பில் மிதக்க உவகையுடன் கரம் கோர்ப்பேனடி... தொலைந்து போன இதயம் தேடி தெருவெல்லாம் கடந்து போனேன் - உன் தெருமுற்றம் வந்ததும் வந்த - என் திசைமாறி போனதடி... கடந்து வந்த பாதைதோறும் - என் கண்ணீர் வடுக்கள் கடைசி நிமிடக் குமுறல்வரை - என் காய்ந்து போன குரல்களே... இதயத்தைக் கீறித்தான் அன்பு வளர்க்க வேண்டுமா? இதயத்தைக் கொடுத்தாலே அன்பு வளரும் தன்னாலே..
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக