வெள்ளி, 13 நவம்பர், 2015

ஒரு காட்டமான செய்தி..

எல்லாருக்கும் ஒரு காட்டமான செய்தி..
ஏங்க.. பிளாக்கர்ல எழுதனும், பிளாக்கர்ல எழுதனும்னு சொல்ரீங்கலே.. நாங்க எழுதுனா யார் படிக்கிறது..
நானும் புதுக்கோட்டையில் நடந்த வலைப்பதிவர் சந்திப்புக்கு வந்திருந்தேன். ஆனா, அதுக்கப்புறம் இதப்பத்தின ஒரு தகவலும் இல்லை. நான் என்னால முடுஞ்சத , எனக்கு தெரிஞ்சத பக்கத்தில் இருந்தவங்களுக்கு சொல்லிக்கொடுத்து பிளாக்கர்ல எழுதவச்சிருக்கேன்..
சரி ஒரு வேல நம்ம எழுதர பதிவு சரியில்லாம இருக்குமோனு கூட நெனச்சிருக்கேன்.இதுல என்னா கொடுமைய்னா, வலைப்பதிவுத்திருவிழாவில் பரிசுப்போட்டினு நடத்தி. நல்ல பழந்தின்னு கொட்ட போட்ட நபர்களுக்குத்தான் பரிசு கொடுத்தார்கள்..
அதில் யாருமே சாமானியர்கள் கிடையாது. எல்லாரும் பெரிய பெரிய கல்லூரிகளில் வேலை பார்க்கிற ஆசிரியர்கள்.அவர்களுக்கு தெரியாத விசயங்கள் என்ன இருக்கு?படித்தவர்கள் பொதுவாக நிறைய தெரிஞ்சு வைத்திருப்ப்பார்கள். சரி நீங்க எப்படியோ போங்க..
நாங்கள் எழுதிக்கொண்டு இருக்கிறோம் என்பதை மற்றவர்களுக்கு எப்படித்தெரியும். புதுசா எழுதர எங்களமாதிரி புதுப்பதிவர்களுக்கு ஒரு பிடிப்புமே இல்லை. தமிழை வளர்க்க எல்லாருடைய பங்கும் முக்கியம் என்பதை நீங்க எல்லாரும் புரிஞ்சுக்கனும்
இதுல நிறைய விசயங்கள் கொட்டிக்கிடக்குது.ஆனா அத எப்படி தெரிஞ்சுக்கிறதுன்னுதான் தெரியல. ம்ம்…
ஏதோ, பிளாக்கரப்பத்தி கொஞ்சம் தெரிஞ்சது. அதனால தான் இவ்வளவுதூரம் அதுவும் தமிழில் தட்டச்சு வரைக்கும் தெரிஞ்சது..இத எல்லாருக்கும் நான் சொல்லலாம்னா தெரியல..

 ஏதோ என்மசில் பட்டத இந்த பதிவில சொல்லனும்னு நெனச்செ.. சொல்லிட்டேன்.. அவ்வளவுதான்..
அன்பு என்பது நெல் மாதிரி
போட்டாத்தான் முளைக்கும்  - ஆனால்
வம்பு என்பது புல் மாதிரி

எதுவும் போடாமலே முளைக்கும்…

இன்னொரு மனம்..

இன்னொரு மனம்..
இன்னொரு முகம்
இருக்கிறது என்பதைக் காட்ட
இல்லாத முகத்தை எப்படி
இயல்பாய் காட்டுவது..
இதயத்தை பிழிந்து எடுக்கிறது
அவனது பிரிவு..
எண்ணியடங்காது சொல்லியும் மாளாது
காதலில் விழுந்த என்னைத்தூக்கிவிட என்
காதலன் எப்போது வருவான்.
நாளொரு வன்னம்
பொழுதொரு மேனியும் என்னவனைக்காண
என் இதயம் அலைபாயுது..
கட்டிப்பிடி வைத்தியமொன்றைக் கற்றுக்கொடுத்தேன்
அதில் அவன் பைத்தியமாய் ஆனானென்று
செவிவழிச்செய்தியொன்று நான் கேட்டேன்..
மறுபிறவியெடுத்து அவனோடு வாழ ஆசை
ஆனால் மனமில்லாமல் போனது நிறையாசை..
கனவொன்று நான் கண்டேன் -அதில்
அவன் விளையாட நான் கண்டேன்…


புதன், 11 நவம்பர், 2015

ஆறு மாதக்குழந்தை

தீபாவளி முடிந்து இன்று 11.11.2015 . ஆனால் நேற்று நடந்த விசயங்களை நினைத்துப்பார்க்கும் போது , நரகாசுரனை வதம் செய்த திருவிழா எனச்சொல்லிக்கொண்டு, ஊரையெல்லாம் புகைமண்டலமாக மாற்றியதோடு அல்லாமல் பக்கத்து வீட்டில் இருந்த ஆறு மாத குழந்தை இருக்கிறது என்றுகூட பார்க்காமல் வெடியை வெடித்தனர்.
ஒரு நாள்முழுவதும் அந்த குடும்பமே அந்த குழந்தையை வைத்துக்கொண்டு படாதபாடு பட்டுவிட்டனர்.
இதுபோக,தீபாவளி அன்று வெடிவெடிக்காத ஊர்கள் பல இருக்கின்றன என கேள்விப்பட்டு ஆச்சர்யத்தில் மூழ்கினேன். அதுவும் குறிப்பாக திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள கூந்தன் குளம் மற்றும் தர்மபுரி மாவட்டத்தில் ஒரு சில ஊர்களின் பெயர்களை அறிய நேர்ந்தது. உண்மையில் அவர்கள்தான் மனிதர்கள். இயற்கையை நேசிக்கத்தெரிந்த மனிதர்கள். அவர்களை இந்தப்பதிவின் மூலம் பாராட்ட வேண்டும் என ஆசைப்படுகிறேன்.
இன்னும் இது போல நல்ல உள்ளம் படைத்தவர்கள் ஆங்காங்கே இருப்பது கண்டு மதைத்தேத்திக்கொள்ளவேண்டியதுதான்.

வியாழன், 5 நவம்பர், 2015

மனம் திறந்து...

    மெளன மொழியாள் மெல்ல                                                                                                         மனம் திறந்தாள்..                                                                                                                               மதிபோன்ற முகமுடையாள்                                                                                                      மென்மையான அகமுடையாள்                                                                                                  முகமொழி பேசும் மதியுடையாள்                                                                                              முந்தானையில்   முடிந்தாள்                                                                                                          மாமனின் மெல்லிய மனதை ..                                                                                                  மலர்போன்ற  இதழுடையாள்                                                                                                     மங்கையவள் மனதைக்கண்டு                                                                                                      மானிடர் யாவருமே மயங்குவாரே...                  

திங்கள், 2 நவம்பர், 2015

திரு. ஜி.யு.போப்.


தமிழுக்கு தொண்டாற்றிய அயல்நாட்டுப் பெருமகனார். திரு. ஜி.யு.போப்.


ஜி. யு. போப் (George Uglow Pope, ஏப்ரல் 24, 1820 - பெப்ரவரி 12, 1908)கனடாவில் பிறந்து கிறிஸ்தவ சமய போதகராக தமிழ் நாட்டிற்கு வந்து 40 ஆண்டு காலம் தமிழுக்கு சேவை செய்தவர். திருக்குறள், நாலடியார், திருவாசகம் நூல்களை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தவர்.
பொருளடக்கம்
  [மறை
வாழ்க்கைச் சுருக்கம்[தொகு]
கனடாவின் பிரின்ஸ் எட்வெர்ட் தீவில்) என்னுமிடத்தில் ஜான் போப், காதரீன் யூக்ளோ போப் ஆகியோருக்கு பிறந்தார் போப். ஜீயார்ஜ் யூக்ளோ என்பது போப்பின் இயற்பெயர்.[1] தந்தையாரின் வாணிபத்திற்காக எட்வர்ட் தீவு சென்றிருந்த குடும்பம், போப்பின் குழந்தைப் பருவத்திலேயே 1826 ஆம் ஆண்டு இங்கிலாந்துக்கு குடும்பத்துடன் திரும்பியது.[1]19 வயது வரை ஹாக்ஸ்டன் கல்லூரியில் கல்வி பயின்றார்.
இங்கிலாந்து பல்கலைக்கழகம் ஒன்றில் 1885 முதல் 1908 வரை தமிழ் மற்றும் தெலுங்கு கற்பிக்கும் பேராசிரியராகப் பணியாற்றினார். 1886 ஆம் ஆண்டு திருக்குறளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார். புறப்பொருள் வெண்பா மாலை, புறநானூறு, திருவருட்பயன் போன்ற நூல்களை பதிப்பித்தார். தமிழ் மீது பெரும் பற்று கொண்ட இவர் நாலடியார், திருவாசகம் ஆகியவற்றையும் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர்.
தமிழ்நாட்டிற்கு வருகை[தொகு]
விவிலிய நூற்கழகத்தைச் சேர்ந்து சமயப்பணி புரிவதற்காக 1839 இல் தமிழ் நாட்டிற்கு வந்தார். கப்பலில் பயணம் செய்த எட்டு மாதங்களிலேயே தமிழை நன்கு கற்றார்.
சென்னைக்கு வந்த போப் சாந்தோம் பகுதியில் தங்கினார். வெஸ்லியன் சங்கம் சார்பாக சென்னை வந்த போப், சென்னையில் இங்கிலாந்து திருச்சபையில் சேர்ந்தார். அங்குகுருபட்டம் பெற்றார். எஸ். பி. ஜி எனும் நற்செய்திக் கழகத்தின் தொண்டராக ஏற்றுக் கொள்ளப்பட்டார். அச்சங்கத்தால் சாயர்புரம் சிற்றூருக்கு சமயத்தொண்டுக்காக அனுப்பி வைக்கப்பட்டார்[1]
சாயர்புரத்தில்[தொகு]
தூத்துக்குடிக்கு அருகே உள்ள சாயர்புரத்தில் தங்கியிருந்த அவர் ஆரியங்காவுப் பிள்ளை , இராமானுசக் கவிராயரிடத்திலும் தமிழ் இலக்கண இலக்கியங்களைக் கற்றார். அருகில் உள்ள செந்தியம்பலம் கிராமத்தை சேர்ந்த நம்மாழ்வார் என்பவர் போப் உடன் நட்பாகி ஞான சிகாமணி என்று தன் பெயரை மாற்றி கிறித்துவரானார். அதனால் ஒரு துவக்க பள்ளிக்கு அவர் பெயரை சூடினார் போப். தமிழ் தவிரதெலுங்கு, மற்றும் சமஸ்கிருதம் ஆகிய மொழிகளையும் கற்றுத் தேர்ந்தார். 1850 ஆம் ஆண்டு இங்கிலாந்து சென்ற போப் அங்கு திருமணம் செய்து கொண்டார்.
போப்பின் சாயர்புர பணி சமயப்பணி, கல்விப்பணி என இரு பகுதிகள் கொண்டது.[1]
தஞ்சாவூரில்[தொகு]
தன் மனைவியுடன் தமிழகம் திரும்பினார். எட்டு ஆண்டுகள் தஞ்சாவூரில் சமயப்பணியை தொடர்ந்தார். இந்த கால கட்டத்தில் புறநானுறு, நன்னூல், திருவாசகம், நாலடியார் போன்ற நூல்களை கற்றார். சில ஆங்கில மொழி இதழ்களில் தமிழ் குறித்த ஆய்வுக் கட்டுரைகளையும் எழுதினார்.
போப்பின் தஞ்சாவூர் பணி சமயப்பணி, கல்விப்பணி, தமிழ்ப்பணி என முப்பரிமாணம் கொண்டது.[1]
உதகமண்டலத்தில்[தொகு]
தஞ்சையில் கிறித்துவத்திற்கு மதம் மாறிய பின்னர் சாதி உயர்வு தாழ்வுகளை மறக்காத உயர் சமூகத்தைச் சேர்ந்தோராகக் கருதப்பட்டோர் தங்களுக்கு முதலிடம் கேட்டனர். போப் இறைவன் முன்னிலையில் அனைவரும் சமம் என்றார். அவரது கருத்து முதலிடம் கேட்டோரால் ஏற்கப்படவில்லை. கிறித்துவ சபையான நற்செய்திக் கழகத்தாரும் உயர் சமூகத்தைச் சேர்ந்தோராகக் கருதப்பட்டவர்களைச் சார்ந்து நின்றதால், போப் தமது 16 வருட நற்செய்திக் கழகத் தொண்டர் பணியிலிருந்து விலகி கிறித்துவ சங்கங்களின் சார்பின்றி அவர்களது பொருள் உதவியின்றி தனிப்பட்ட முறையில் சமயப் பணியாற்றும் நோக்குடன், போதிய பொருளின்றி தஞ்சையிலிருந்து மனைவி மற்றும் ஐந்து மக்களுடன் மாட்டு வண்டியில் ஏறி 24 நாட்கள் பயணம் செய்து உதகமண்டலம் சென்றார்.[1]
உதகையில் ஐரோப்பிய மாணவர்களுக்கு ஆசிரியராக அமர்ந்து பாடம் சொன்னார், பின்னர் உதகையில் சிறந்த பள்ளியை உருவாக்கினார், சிறைத் தண்டனை பெற்றிருந்த ஐரோப்பிய குற்றவாளிகளைக் கண்டு பேசுவார். இடைவிடாது பழைய தமிழ்நூல்களைக் கற்றுவந்தார். பழைய ஏட்டுச் சுவடிகளைத் தேடிச் சேகரித்தார். [1]
உதகையில் அவரது பணிக்காக இங்கிலாந்தின் கந்தர் புரி அத்தியட்சர்மறை நூற் புலவர்எனும் பட்டம் அளித்தார். [1]
பெங்களூரில்[தொகு]
1871இல் சில சூழல் காரணமாக பெங்களூர் சென்று அங்கு கல்விப் பணியும் சமயப்பணியும் ஆற்றினார். அங்கு உடல் நலம் குன்றியதால் 1882இல் இங்கிலாந்து திரும்பினார்.[1]
தமிழ்த் தொண்டுகள்[தொகு]
·         இங்கிலாந்து பல்கலைக்கழகம் ஒன்றில் 1885 முதல் 1908 வரை தமிழ் மற்றும் தெலுங்கு கற்பிக்கும் பேராசிரியராக பணியாற்றினார்.
·         1886 ஆம் ஆண்டு திருக்குறளை ஆங்கிலத்தில் மொழிப்பெயர்த்தார்.
·         புறப்பொருள் வெண்பா மாலை, புறநானூறு, திருவருட்பயன் போன்ற நூல்களை பதிப்பித்தார்.
·         தமிழ் மீது பெரும் பற்று பெற்ற அவர் நாலடியார், திருவாசகம் ஆகியவற்றையும் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர்.
மூன்று இறுதி விருப்பங்கள்[தொகு]
முதுமையில் தளர்ச்சியடைந்த சமயம் தமது நண்பரிடம் மூன்று விருப்பங்களைத் தெரிவித்திருந்தார் ஜி.யு.போப்.[1]
·         இறப்புக்கு பின் தனது கல்லறையில் இங்கே ஒரு தமிழ் மாணவன் உறங்கிக் கொண்டிருக்கிறான் என்ற வாசகம் இடம்பெற வேண்டும்[1](அவரது உயிலிலோ அவரது கல்லறையிலோ அத்தகைய கருத்து சேர்க்கப்படவில்லை).
·         தமது கல்லறைக்குச் செலவிடும் தொகையில் ஒரு சிறுபகுதியாவது தமிழ் மக்களின் நன்கொடையால் அமைய வேண்டும். பச்சையப்பன் கல்லூரித் தமிழ் பேராசிரியர் செல்வக் கேசவராயர் தமிழன்பர்களிடம் நன்கொடை திரட்டி இங்கிலாந்துக்கு அனுப்பி வைத்தார்.[1]
·         கல்லறையில் தம்மை அடக்கம் செய்யும் போது தான் மொழிபெயர்த்து வெளியிட்ட திருக்குறள் மற்றும் திருவாசத்தையும் உடன் வைக்க வேண்டும் என்பது.[1]

தமிழுக்கு தொண்டாற்றிய அயல்நாட்டினருள் திரு.ஜி.யு.போப் அவர்களுக்கும்  மிகப்பெரிய பங்குண்டு என்பதை இந்தக் கட்டுரை வாயிலாகத்  தெரிந்து கொள்ளலாம்