வெள்ளி, 16 அக்டோபர், 2015

அது ஒரு ரம்மியமான மாலைப்பொழுது.
கடல் அலையின் சப்தமும், ஆங்காங்கே சில பறவைகளின் ரீங்காரமும் என் காதுகளுக்குத்
தேனை அள்ளித்தெளித்தவன்னம் இருந்தன. எனக்கே தெரியாமல் என் மனதுக்குள் ஏதோ
ஒரு பழைய ஞாபகம் வந்ததுபோல்  ஒரு கனவு. ஆனால் அது எப்போதோ என் வாழ்க்கையில் நடந்தது போலும் ஒரு உணர்வு.
மெதுவாக நடந்துகொண்டே அந்தக்கனவு என்ன என்று யோசித்துக்கொண்டிருக்கையில் திடீரென்று ஒரு பிம்பம் என்முன் வந்து சென்றதை நான் உணர்ந்தேன். சுற்றும் முற்றும் பார்த்தால் ஒன்றும் என் கண்களுக்கு தெரியவில்லை.
மீண்டும் சிறிது நேரம் கழித்து அந்த கனவு என்னவாக இருக்கும் என யோசித்துக்கொண்டு இருந்த சமயம், முன்பு வந்த அதே பிம்பம் என்முன் வந்து நின்றது.
எனக்கு சற்றுநேரம் என்ன நடக்கிறது என்றே தெரியவில்லை.என் மனதை ஆழ்ந்த பயம் வந்து தொற்றிக்கொண்டது. தானாக நடந்த என் கால்கள் பயத்தில் உதர ஆரம்பித்துவிட்டன.
யாருமே இல்லாத கடற்கரை அது. எப்படி இந்த உருவம் மட்டும் நம் முன் வரக்கூடும் என குலம்பிவிட்டேன்.
சற்று நிதானமாக என் பயத்தை அடக்கிகொண்டு, என்முன் நின்ற அந்த உருவத்தை கூர்ந்து கவனித்தேன்.
அடடா! என்ன ஒரு ஆச்சரியம். அந்த பிம்பம் நம்மைப்போல மனித உருவமாகவே இருந்தது.அதுவும் பெண்னுருவமாக இருந்தது.
ஆனால், அதனுடைய கண்களில் ஒரு வலியும் வேதனையும் இருந்ததை நான் உணர்ந்தேன்…
அது மெதுவாக நடந்து என் அருகில் வந்து என்னை நன்றாக உற்றுப்பார்த்தது. மீண்டுமாய் அதனுடைய கண்களில் கண்ணீர். ஆனால் அது ஆனந்தக்கண்ணீர் என உணர்ந்து கொண்டேன்.
எதோ முன்ஜென்ம உறவு என்றுதான் சொல்லவேண்டும். அப்படியொரு நேசமிக்க, பாசமிக்க, ஒரு அன்பு களந்த பார்வை அது.என்னால் அந்தப்பார்வைக்கு அர்த்தம் சொல்லத்தெரியவில்லை
அந்த பிம்பம் மெதுவாக என் அருகில் வந்து என் கைகளைப்பிடித்துக்கொண்டு சந்தோசமாக, அதுவும் முன்பிருந்த கவலை , வலிகளையும் மறந்து மகிழ்ச்சியில்
முத்தமிட்டுக்கொண்டிருந்தது.
சற்று நேரம் ஆன பிறகு, நான் அந்தக் கண்களில் இருந்த கண்ணீரைத்துடைத்துவிட்டு
நான் கேட்டேன்…
அம்மா, நீங்கள் யார்? இந்த மாலைவேலையில் தனியாக இங்கு என்ன செய்துகொண்டிருக்கிறீர்கள்?  என்று..
அதற்கு அவர்கள் கூறிய கதையைக்கேட்டு, என்னுடைய கண்களும் குளமாகின.
அந்தக்கதையில் அவ்வளவு வலியும் வேதனைகளும் இருந்தன.எப்படி இருக்கவேண்டிய
அந்தத்தாய் , இப்படித்தனியாக, யாருமில்லாத கடற்கரையில் அனாதையைப்போல் அலைந்து திரிந்து கொண்டிருக்கிறார்கள்.
 இவ்வளவு பாசமிக்க, அன்புமிக்க, கருணையுள்ளம் கொண்ட தாய்க்கு என்னதான் நடந்தது?


தொடரும்….

வியாழன், 15 அக்டோபர், 2015

டாக்டர். அப்துல் கலாம் பிற்ந்த நாள்

அப்துகலாம் பிறந்தநாள் விழா
இராமேஸ்வரக் கடலில் பிறந்த முத்து
இறைவன் நமக்குத்தந்த சொத்து..

 அறிவியலின் ஆசான் அவரே
அரசியலை விடுத்து
இல்லால் துனையின்றி
இமையம் வரை உயரலாம் என்பதற்கு
இவரே எடுத்துக்காட்டு..

ஆராய்ச்சியிலேயே அகவை
அனைத்தையும் கழித்தவர்..

சாதிக்கப்பிறந்த மனிதரில்
சிறந்த மானிடர் நீர்..

ஏழையும் பாழையும் உமக்கு
அழையா விருந்தாளிகலே..

இளைஞர்களின் கைகளில் – இந்த
உலகம் சுழல வேண்டும் என
வேட்கை கொண்டவர்..

மாணவர்களின் மனங்களில்
தழும்பாய் சுவடாய்
இதயக்கீரல்கள் செய்தவர்..

அடுத்திருப்பவனும் மனிதன் தான்  என்று
அனைவரையும் அறியச் செய்தவர்..

இளம் பிஞ்சுகளின் நெஞ்சங்களில்
சுடரொளி உதிக்கச்செய்தவர்..

சத்திய சோதானை வேள்வியிலே
காந்திய புத்திய போதனைக்கற்றவர்..
மகாத்மாவின் வழி நடந்து – மக்கள்
மனங்களில் மங்காப்புகழோடு வாழ்பவர்..

 அணுஆராச்சியை இந்திய வாசலிலே
விளையாட வைத்தவர் - அதை
ஆழமாய் அற்புதமாய் பதித்தவர்..

இந்தியா வல்லரசாவது
இன்றைய இளைஞர்களின் கைகளிலே என
இயன்றவரை எடுத்துக்கூறியவர்..
இது டாகடர்.எ. பி. ஜெ அப்துல்கலாம் அவர்கள் இளைஞர்களுக்கு விடுக்கும் அழைப்பு..

இளைஞனே எழு”

கடல் நீரில் என் கண்ணீர் பயணம்

கடல் நீரில் என் கண்ணீர் பயணம்

ஊமையான என் பேனாஉதிற்கும் உன்னத முத்துக்கள்…

கடல் நீரில் ஒரு நெடும்பயனம் – என்
கண்ணீரோடு..
இதுவரை நீங்கள்
யாருக்காகவும் எதற்காகவும்
உங்களின் கண்களில்
கண்ணீர் வரவில்லை என்று நினைத்தாலும்
இந்த கவிதை பயணத்தின் மூலம் – என்
கவிதை வரிகள்
உங்களின் கண்களை குளமாக்கும்
என்பதில் ஐயமில்லை…
வாழ்க்கைப் படகில் பயணிக்க
எத்தனிக்கும் எல்லாரும் – என்
கவிதை என்னும் படகில் ஏறி
எழுத்து என்ற துடுப்பேந்தி
பயணம் செய்ய வாருங்கள்..
கலியுக உலகை மறந்து
கடந்து வந்த குழந்தை, மாணவ
இளமை பருவ காலங்களை
இனிமையாய் நினைத்து
ஆசையோடு அசைபோட
ஆவலுடன் வாருங்கள்...
எந்த கவலை துன்ப துக்க
நேரமானாலும், இந்த கண்னீர் பயணம்
உங்களின் மனங்களை படிக்கும்..
இதயங்களை இலகுவாக்கும்..
எப்பேர்ப்பட்ட பயணம்’’
இது ஒரு வரம்..


திங்கள், 5 அக்டோபர், 2015

தீபாவளி திருநாள்

தீபாவளி  திருநாள்
  மகிழ்ச்சி தீபங்கள் ஒளிர
  தீப ஒளியாம் தீபாவளித் திருநாள்..
  நெஞ்சத்தில்  இகழ்ச்சியை மறந்து
  புகழ்ச்சிப் பூவை ஒளியாக
  நம் மனங்கள் சுமக்கும் நன்னாள்..
  
  எரிகின்ற தீபங்களின்
  எண்ணமும் ஏக்கமும்..

  எல்லா நாழும்
  எங்களை தீபங்களாக
  ஏற்றுகின்றீர்கள்..
  என்றாவது ஒரு நாள்
  நீங்கள் யாருக்காகவாவது
  உங்களை நீங்கள்
  எரிகின்ற தீபங்களாக
  ஏற்றியிருக்கிறீர்களா?
  
  அடுத்தவரை அனையாத்தீயில்
  இட்டு கொளுத்துவது
  மனிதருக்கு எத்துனை இன்பம்?

  மானிடமே
  என்னைப் பார்த்துக்
  கற்றுக்கொள்ளுங்கள்..
  வகைகளில் நான்கு..
  விளக்கு, என்னெய்
  திரி,  தீ என..
  நால்வரும் இனைந்து
  உங்களுக்கு ஒளியைத்தருவது  போல்
  நீங்கள் ஏன்
  உடனிருப்பவருக்கு உதவ
  மறுக்கிறீர்கள்..
  
  தன்னலம் கருதாமல்
  தீயில் கருகி திரியான நான்
  உங்களுக்கு ஒளியைத் தருகிறேனே?
  பிறருக்காக உங்களை
  நீங்கள் உருக்க
  மறுப்பதேன்?
  
  என்னைப் பெருமைப்படுத்துவதாகச் சொல்லி
  எல்லாரும் புத்தடை உடுத்தி
  இனிப்புகள் உண்டு
  எனை மறந்து
  நீங்கள் மட்டும் மகிழ்வதேன்?
   
  எரிகின்ற தீபங்களை ஏற்றி
  ஒளியேற்றினால் மட்டும் போதுமா?
  இருட்டில் இருக்கும்
  உங்களின் மனங்களை
  என் ஒளிக்கு கொணர்வது எப்போது?

  விளக்கு எற்றி
  விருந்து படைப்பதாலே
  தீபாவளித்திருநாள்
  திருப்தி அடைந்து விட்டது
  என நினைத்து விடாதே..

  கும்மிருட்டில் வாழும்
  குருட்டு சமுதாயத்தை
  வீதியில் எரியும்
  வெளிச்சத்திற்கு கொண்டுவர வேண்டும்..

  குலம் கோத்திரம் என்ற
  கொடுமைகளை களைந்து
  மனிதன் மட்டுமே
  மீதியான ஜாதியென
  மனதார ஒப்புக்கொள்ள
  இந்தப்  பேரொளித்திருநாளாம்
  தீபாவளித்திருநாளைக்

  கொண்டாடி மகிழ்வோம்..