செவ்வாய், 12 ஜூன், 2018

இனிய மாலை வணக்கம்...                                                                                                             இரண்டு நாட்களுக்கு முன்பு சட்டப்பேரவையில் மாண்புமிகு முதல்வர் அவர்கள் குறுவை சாகுபடிக்கு காவிரியில் இருந்து தண்ணீர் திறந்துவிட முயாத சூழ்நிலை உள்ளதாகக் கூறினார். அதற்கு பதிலாக குறுவை சாகுபடித்திட்டம் என்று சொல்லி அதற்கு தனியாக ஒரு குறிப்பிட்டத் தொகையை மானியமாகத் தருவதாக அறிவித்துள்ளார். விவசாய மக்களின் உண்மை நிலையைப் புரிந்து கொள்ளாமல், வெறும் மானியமாக பணத்தை மட்டும் கொடுத்தால் விவசாயம் செய்துவிடமுடியும் என்று தப்புக்கணக்கு போட்டுவிட்டார். முதலில் தண்ணீர் இல்லாமல் எப்படி விவசாயம் செய்ய முடியும். டெல்டா விவசாய மக்களின் நிலை மிகவும் கேள்விக்குறியாக உள்ளது. அனைவரும் அதிக மழை வேண்டி கடவுளை பிராத்திப்போம்.                  நன்றி... 

புதன், 6 ஜூன், 2018

மௌன வாசிப்பு நம் மனதை இலகுவாக்கும். நான் எழுதும் வரிகள் படிப்பவரின் இதயத்தை வருடிச்செல்லும். பல நேரங்களில் வழிகளைக்காட்டும், வலிகளையும் கொடுக்கும். எனெனில் என் எழுத்துக்களுக்கு உயிர் உண்டு. என் வலைப்பூவைத்திறந்து அமைதியில்லாத உங்களின் இதயங்களுக்கு மன அமைதியைத் தேடுங்கள். கவலயோடு இருக்கும் உங்களின் உள்ளங்களுக்கு நிம்மதியைத்தரும். இனி அனுதினமும் என் எழுத்துக்கள் உங்களுக்கு மருந்தாக வரும். திறந்து வாசித்து உங்களின் மேலான கருத்துக்களை பதிவிட உங்களை அன்போடு அழைக்கிறேன். நன்றி.
பார்க்கும் கண்களுக்கு என் இதயம் கனிந்த நன்றி..                                                                        ஒரு ரம்மியமான மாலைப்பொழுது என்ற கதையின் தொடர்ச்சி..                  தஞ்சை மாவட்டத்தில் இருக்கும் பட்டுக்கோட்டைக்கு அருகில் உள்ள கிராமம்.மிகவும் அழகாக பச்சைப் போர்வை போர்த்தியது போல் எங்கு பார்த்தாலும் வயல்வெளிகள்,நாற்றாங்கால்கள்.தென்னைமரத்தோப்புகள் நிறைந்த கிராமம். அதில் ஒரு அழகான சிறிய குடும்பம்.வாழையடிவாழையாக அங்கு குடியிருக்கும் குடும்பம். கணவன் தேவராசு, மனைவி சிந்தாமணி,மற்றும் இரு குழந்தைகள் நளன், பூங்குலழி என மகிழ்ச்சியோடு வாழ்ந்திருக்கின்றனர்.அந்த ஊரில் உள்ள அனைவருக்கும் மிகவும் பரிட்சயமான குடும்பம்.பெரிய அளவில் வசதியில்லாத போதும், இல்லை என்று வருபவருக்கு உதவி செய்யும் அளவுக்கு கடவுள் செல்வத்தைக் கொடுத்திருந்தார்.ஊர் பொது காரியங்கள், கோவில் விழாக்கள் என அனைத்திற்கும் உதவி செய்து வந்தனர்.                                                                                       அப்படி ஒரு நாள் ஒரு ஏழை விவசாயி ஒருவர், அவரிடம் உதவி கேட்டு வந்தார்.அய்யா வீட்டில் யாரும் இருக்கீங்களா? எனக் கேட்டுவிட்டு வெளியில் நின்றுகொண்டு இருந்தார்.உள்ளே அவருடைய மனைவி சமையலறையில் ஏதோ வேலையை முடித்து விட்டு வந்தார்.  வெளியில் நின்றவரை வாங்கய்யா என அழைத்து குடிக்க மோர்கொடுத்தார். வெகுதூரம் நடந்துவந்த களைப்பிற்கு மோர் கிடைத்தது அந்த பெரியவருக்கு மகிழ்ச்சியாக இருந்தது.        அய்யா என்ன விசயமாக என் வீட்டுக்காரரைப் பார்க்க வந்தீர்கள் என கேட்டார். அதற்கு அந்த பெரியவர் தான் செய்த விவசாயத்தொழிலில் மிகவும் நஷ்டமடைந்துவிட்டதாகக் கூறினார். பிறரிடம் கடன் வாங்கி பயிர் செய்ததாகவும், அது இப்போது இரண்டு மூன்று மடங்காக மாறிவிட்டது என்று கூறினார்.அதனால் எனக்கு கடன் கொடுத்தவர்கள் கடனைத்திருப்பித்தரும்படி கேட்க்கின்றனர். ஆனால் என்னால் இப்போது அவர்களிடம் பெற்ற கடனைத் திருப்பிச்செலுத்த முடியாத சூழ்நிலையில் இருக்கிறேன். தேவராசிடம் சொல்லி ஏதாவது உதவமுடியுமா என கேட்டுவிட்டு போகலாம் என்று வந்தேன் என கூறினார்.                                                 [தொடரும்] 

புதன், 23 ஆகஸ்ட், 2017

தண்ணீர் தேசம்                                                                                                                                   தாகத்தின் பசி தண்ணீர்.நீரின்றி அமையாது உலகு என்பது வள்ளுவனின் வாக்கு. நமக்கு தண்ணீர் தேவை. ஆனால் நீரை சேமிக்க நாம் முன் வருவது இல்லை. நீர் நமக்கு முக்கிய தேவையாக உள்ளது.முதலில் நாம் இயற்கையைப் பேன வேண்டும். அதன்மூலம் தான் நமக்கு என்னற்ற பலன்கள் கிடைக்கும்.                                                                                                                       மனித வாழ்க்கையில் எத்தனையோ போரட்டம். நாம் எதைப்பெற வேண்டுமானாலும் போராடித்தான் பெற வேண்டி இருக்கிறது.அதனால்தான், மனித வாழ்க்கையே போராட்டம் என்று பலர் சொல்ல கேள்விப்பட்டிருக்கிறோம். வாழ்க்கை நமக்குக் கற்றுக்கொடுக்கும் பாடம் ஏராளம். அதில் நாம் எதை கடைபிடிகிறோம் என்பதைப்பொருத்து தான் நம் வாழ்வு இனிமையானதாகவும், எளிமையானதாகவும் இருக்கும் என்பதில் ஐயமில்லை.                                                                                                                                         நீரைச்சேமிக்க நம்மால் முடிந்த செயல்களை  சமூக நல குழுக்கலோடு இனைந்து குளம்,குட்டை, மற்றும் ஏரிகளை தூர்வாரி மக்களின் தண்னீர்த் தேவையைப் பூர்த்தி செய்ய முன் வர வேண்டும்.நீரில்லா உலகை மாற்றி, நீராதாரம் உள்ள உலகு படைக்க உறுதி ஏற்போம். புதிய தண்ணீர் தேசம் படைப்போம்.

வெள்ளி, 18 ஆகஸ்ட், 2017

அரசியல் களம்                                                                                                                                          அதிமுகவில் அரசியல் தந்திரிகள் அநேகம் பேர் உள்ளனர். எத்தனை பொய் புரட்டு அவர்களின் வாய்களில் அனுதினமும் நாம் பார்க்கிறோம்.ஒருவர் கூட உண்மையான அரசியல் வாதிகள் இல்லை. பணத்திற்காகவும் பதவிக்காகவுமே முழு நேர அரசியல் செய்கிறார்கள். இதில் முழுமையாக ஏமாற்றப்படுவது மக்களாகிய நாம் தான். தயவு செய்து அடுத்த முறை ஓட்டளிக்கும் போது சிந்தித்து வாக்களிக்க உங்களை அன்போடு அழைக்கிறேன்                                                                                                                                                                                 இப்படிக்கு உங்கள் நண்பன்                                                                                                          ஆ. ஜோசப் ஜெயபால்- திண்டுக்கல்
தன்னம்பிக்கை                                                                                                                                   ஒருவர் தன் மீதும் தன் ஆற்றல் மீதும் வைக்கும் நம்பிக்கையே தன்னம்பிக்கை ஆகும். தன்னம்பிக்கை உள்ளவர்கள் வாழ்வில் வெற்றி பெறுவது உறுதி.தன்னம்பிக்கை இல்லாதவர்களே தோல்வியைக்கண்டு அஞ்சுவார்கள்.தன்னை யாரும் ஏற்றுக்கொள்ளவில்லை என்று நினைத்து மனம் தளர்ந்துவிடுவார்கள்.                                                                                                         தன்னம்பிக்கை என்பது ஒருவர் தனக்குள் கொள்கின்ற சுய தயாரிப்பே ஆகும். அவர் தன்னை அவ்வாறு தயாரித்துக்கொள்ளும் போது, தன்னைப் பற்றி சுய ஆய்வு செய்கிறார்.அப்போது தன்னுடைய ஆற்றலைக் கண்டுபிடித்து அதைப் பயன்படுத்தி, தான் அடைய விரும்பும் இடத்தையும் சென்று அடைந்துவிடுகிறார். தன்னம்பிக்கை ஒருவரை நேர்வழியில் சிந்திக்க வைக்கிறது.                                                                                                                                          தன்னைப் பற்றிய சுய உணர்வே இந்த நூற்றாண்டின் மிகப்பெரிய கண்டுபிடிப்பு என்கிறார்கள் மனோதத்துவ அறிஞர்கள். நம்மைப் பற்றி நாம் என்ன எண்ணம் கொண்டிருக்கிறோம் என்பதைப் பொறுத்துத்தான் நமது மகிழ்ச்சியும் சாதனையும் அமைகின்றன என்கிறார்கள்.                                                 வளமான மனமும் தன்னைப் பற்றிய மேன்மையான சுய உணர்வும் கொண்டவர்கள் தன்னை மதிப்பதோடு தன்னைச் சுற்றியுள்ள சமுதாயத்தையும் மதிக்கிறார்கள். ஒருவருடைய சுய உணர்வே அவருக்குத் தன்னம்பிக்கையை அளிக்கிறது. சுய உணர்வு உடையவர்கள் தங்கள் பலத்தைத் தெரிந்துகொள்வதோடு தங்களுடைய பலவீனத்தைத் தெரிந்து வைத்திருக்கிறார்கள். அதனால், தங்களுக்குக் கிடைக்கும் உண்மையான பெயரையும் புகழையும் மகிழ்ச்சியோடு ஏற்றுக் கொள்கிறார்கள்.

திங்கள், 17 அக்டோபர், 2016

எ ன்  தா ய்  மொழியாம் தமிழ் மொழிக்கு 


செந்தமிழ் தாய் மொழியாள் – நம்
செவ்விதழ் வாய் மொழியாள்
சிந்திய தேன் மொழியாள் – நம்
இந்திய தேசத்து செம்மொழியாள்..

மூலமொழிக்கு முதல் மொழியாம் – நம்
முத்தமிழ் செந்தமிழ் தனி மொழியாம்
முத்துக் குளித்த முதல் மொழியாம் –நம்
மூத்தோர் மூதுரைத்த இன் மொழியாம்..

அகத்தியன் முதலாய் தொல் காப்பியன் ஈறாய்
ஆயிரம் பாவலர் புனைந்த நல் நாற்றாய்
இலக்கணச் சுவையோடு நற்குணம் ஏற்றாய்
உள்ளம் பெரிதுவக்க அடியார்க்கு ஈந்தாய்..

உந்தி முதலா முந்திவளி தோன்றி
உயிர்முன் மெய்யாய் மெய்முன் உயிறாய்
ஒற்றுமுன் பகுதி விகுதி சந்தியாய் தெளிந்த
நல்பதம் சேர்க்கும் கண்மனியாள்..

அகம் புறம் நானூறும் அடக்கி
தொண்ணூற்று ஆறு சிற்றிலக்கியமும்
பதினெண் கீழ்மேல் கணக்கென
பொழிந்த நற்றமிழ் கண்மனியாள்..

தமிழின் மீது தணியாத தாகம் கொள்வோம்
தரணியில் சிறந்தது தமிழென மொழிவோம்
தமிழால் தமிழ்க்குடி தழைக்கு மென்போம்
தமிழே உயிர் மூச்செனக் கொள்வோம்..