புத்தகப் புழு
புத்தகப் புழு
நல்ல புத்தகம்
ஒரு
நல்ல நண்பன்
எனை யாசிப்போரை
நான் ஆசிக்கின்றேன்..
குளத்தைக் குளப்பினாலும்
கொண்ட அறிவுமட்டும்
குறைவுபடாது..
குறிக்கோள் கோணலானாலும்
குறிக்கோளை அடைய வேண்டுமென்ற
குணம் மட்டும்
போதுமே..
வார்த்தைகளை வரிகளாக வடித்து
கருத்துக்களை மணங்களில் இரைத்து
கல்வி என்ற
திறவுகோலில் திறந்து
அறிவை வளர்க்க
ஆழமான சிந்த்னைகளோடு
புத்தகங்களாக வருகிறேன்
தினமும் உங்கள் வாசல் தேடி..
என்னை எடுத்து
சுமப்பவருக்கு
அறிவுக்கணி எளிதாகக் கிடைக்கும்..
பாகுபாடில்லாத பகுத்தறிவுக்கடல் நான்
எனைப்படிக்க குலமும் கோத்திரமும்
தேவையில்லை..
எனைப் படிக்க படிக்க
பாமரனும் பண்பாளனாகத்தான்
ஆக முடியுமே தவிர
பகட்டும், பண்பற்றவராக முடியாது..
நானும் உனைப்போல ஒரு
புத்தகமாக மாற ஆசை - ஏனெனில்
என்னை மார்மீதும் தோள்மீதும் சுமந்து
ஆரத்தழுவி அன்பு செய்ய
எத்தனை நல்ல உள்ளங்கள்..
கதையையும், கற்பனைகளையும்
கருத்துக்களையும் உணர்ச்சி பொங்க
வரிகளாக வாசம் செய்வது
நல்ல புத்தகமே..
வரிந்த வசகங்களை
சுமந்து நிற்கும் சுவற்றிற்குத்தான்
தெரியும்
வரியின் வலிமை எத்துனை வலியது என்று..
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக