அது ஒரு ரம்மியமான மாலைப்பொழுது.
கடல் அலையின் சப்தமும், ஆங்காங்கே சில பறவைகளின்
ரீங்காரமும் என் காதுகளுக்குத்
தேனை அள்ளித்தெளித்தவன்னம் இருந்தன. எனக்கே தெரியாமல்
என் மனதுக்குள் ஏதோ
ஒரு பழைய ஞாபகம் வந்ததுபோல் ஒரு கனவு. ஆனால் அது எப்போதோ என் வாழ்க்கையில் நடந்தது
போலும் ஒரு உணர்வு.
மெதுவாக நடந்துகொண்டே அந்தக்கனவு என்ன என்று யோசித்துக்கொண்டிருக்கையில்
திடீரென்று ஒரு பிம்பம் என்முன் வந்து சென்றதை நான் உணர்ந்தேன். சுற்றும் முற்றும்
பார்த்தால் ஒன்றும் என் கண்களுக்கு தெரியவில்லை.
மீண்டும் சிறிது நேரம் கழித்து அந்த கனவு என்னவாக
இருக்கும் என யோசித்துக்கொண்டு இருந்த சமயம், முன்பு வந்த அதே பிம்பம் என்முன் வந்து
நின்றது.
எனக்கு சற்றுநேரம் என்ன நடக்கிறது என்றே தெரியவில்லை.என்
மனதை ஆழ்ந்த பயம் வந்து தொற்றிக்கொண்டது. தானாக நடந்த என் கால்கள் பயத்தில் உதர ஆரம்பித்துவிட்டன.
யாருமே இல்லாத கடற்கரை அது. எப்படி இந்த உருவம் மட்டும்
நம் முன் வரக்கூடும் என குலம்பிவிட்டேன்.
சற்று நிதானமாக என் பயத்தை அடக்கிகொண்டு, என்முன்
நின்ற அந்த உருவத்தை கூர்ந்து கவனித்தேன்.
அடடா! என்ன ஒரு ஆச்சரியம். அந்த பிம்பம் நம்மைப்போல
மனித உருவமாகவே இருந்தது.அதுவும் பெண்னுருவமாக இருந்தது.
ஆனால், அதனுடைய கண்களில் ஒரு வலியும் வேதனையும் இருந்ததை
நான் உணர்ந்தேன்…
அது மெதுவாக நடந்து என் அருகில் வந்து என்னை நன்றாக
உற்றுப்பார்த்தது. மீண்டுமாய் அதனுடைய கண்களில் கண்ணீர். ஆனால் அது ஆனந்தக்கண்ணீர்
என உணர்ந்து கொண்டேன்.
எதோ முன்ஜென்ம உறவு என்றுதான் சொல்லவேண்டும். அப்படியொரு
நேசமிக்க, பாசமிக்க, ஒரு அன்பு களந்த பார்வை அது.என்னால் அந்தப்பார்வைக்கு அர்த்தம்
சொல்லத்தெரியவில்லை
அந்த பிம்பம் மெதுவாக என் அருகில் வந்து என் கைகளைப்பிடித்துக்கொண்டு
சந்தோசமாக, அதுவும் முன்பிருந்த கவலை , வலிகளையும் மறந்து மகிழ்ச்சியில்
முத்தமிட்டுக்கொண்டிருந்தது.
சற்று நேரம் ஆன பிறகு, நான் அந்தக் கண்களில் இருந்த
கண்ணீரைத்துடைத்துவிட்டு
நான் கேட்டேன்…
அம்மா, நீங்கள் யார்? இந்த மாலைவேலையில் தனியாக இங்கு
என்ன செய்துகொண்டிருக்கிறீர்கள்? என்று..
அதற்கு அவர்கள் கூறிய கதையைக்கேட்டு, என்னுடைய கண்களும்
குளமாகின.
அந்தக்கதையில் அவ்வளவு வலியும் வேதனைகளும் இருந்தன.எப்படி
இருக்கவேண்டிய
அந்தத்தாய் , இப்படித்தனியாக, யாருமில்லாத கடற்கரையில்
அனாதையைப்போல் அலைந்து திரிந்து கொண்டிருக்கிறார்கள்.
இவ்வளவு
பாசமிக்க, அன்புமிக்க, கருணையுள்ளம் கொண்ட தாய்க்கு என்னதான் நடந்தது?
தொடரும்….
கதை மிக அருமை. தொடர்கிறேன்.எனது வலைப்பூவுக்கு வருகை தந்து கருத்து சொன்னதற்கு நன்றி. வலைப்பூவில் இணைந்து தொடர்ந்து வந்து கருத்துக்களை சொல்லுங்கள்.
பதிலளிநீக்குசற்று வேலை அதிகம் என்பதால் எழுத முடியவில்லை.. மீண்டும் தொடருவேன்..
நீக்கு