செவ்வாய், 12 ஜூன், 2018

இனிய மாலை வணக்கம்...                                                                                                             இரண்டு நாட்களுக்கு முன்பு சட்டப்பேரவையில் மாண்புமிகு முதல்வர் அவர்கள் குறுவை சாகுபடிக்கு காவிரியில் இருந்து தண்ணீர் திறந்துவிட முயாத சூழ்நிலை உள்ளதாகக் கூறினார். அதற்கு பதிலாக குறுவை சாகுபடித்திட்டம் என்று சொல்லி அதற்கு தனியாக ஒரு குறிப்பிட்டத் தொகையை மானியமாகத் தருவதாக அறிவித்துள்ளார். விவசாய மக்களின் உண்மை நிலையைப் புரிந்து கொள்ளாமல், வெறும் மானியமாக பணத்தை மட்டும் கொடுத்தால் விவசாயம் செய்துவிடமுடியும் என்று தப்புக்கணக்கு போட்டுவிட்டார். முதலில் தண்ணீர் இல்லாமல் எப்படி விவசாயம் செய்ய முடியும். டெல்டா விவசாய மக்களின் நிலை மிகவும் கேள்விக்குறியாக உள்ளது. அனைவரும் அதிக மழை வேண்டி கடவுளை பிராத்திப்போம்.                  நன்றி... 

புதன், 6 ஜூன், 2018

மௌன வாசிப்பு நம் மனதை இலகுவாக்கும். நான் எழுதும் வரிகள் படிப்பவரின் இதயத்தை வருடிச்செல்லும். பல நேரங்களில் வழிகளைக்காட்டும், வலிகளையும் கொடுக்கும். எனெனில் என் எழுத்துக்களுக்கு உயிர் உண்டு. என் வலைப்பூவைத்திறந்து அமைதியில்லாத உங்களின் இதயங்களுக்கு மன அமைதியைத் தேடுங்கள். கவலயோடு இருக்கும் உங்களின் உள்ளங்களுக்கு நிம்மதியைத்தரும். இனி அனுதினமும் என் எழுத்துக்கள் உங்களுக்கு மருந்தாக வரும். திறந்து வாசித்து உங்களின் மேலான கருத்துக்களை பதிவிட உங்களை அன்போடு அழைக்கிறேன். நன்றி.
பார்க்கும் கண்களுக்கு என் இதயம் கனிந்த நன்றி..                                                                        ஒரு ரம்மியமான மாலைப்பொழுது என்ற கதையின் தொடர்ச்சி..                  தஞ்சை மாவட்டத்தில் இருக்கும் பட்டுக்கோட்டைக்கு அருகில் உள்ள கிராமம்.மிகவும் அழகாக பச்சைப் போர்வை போர்த்தியது போல் எங்கு பார்த்தாலும் வயல்வெளிகள்,நாற்றாங்கால்கள்.தென்னைமரத்தோப்புகள் நிறைந்த கிராமம். அதில் ஒரு அழகான சிறிய குடும்பம்.வாழையடிவாழையாக அங்கு குடியிருக்கும் குடும்பம். கணவன் தேவராசு, மனைவி சிந்தாமணி,மற்றும் இரு குழந்தைகள் நளன், பூங்குலழி என மகிழ்ச்சியோடு வாழ்ந்திருக்கின்றனர்.அந்த ஊரில் உள்ள அனைவருக்கும் மிகவும் பரிட்சயமான குடும்பம்.பெரிய அளவில் வசதியில்லாத போதும், இல்லை என்று வருபவருக்கு உதவி செய்யும் அளவுக்கு கடவுள் செல்வத்தைக் கொடுத்திருந்தார்.ஊர் பொது காரியங்கள், கோவில் விழாக்கள் என அனைத்திற்கும் உதவி செய்து வந்தனர்.                                                                                       அப்படி ஒரு நாள் ஒரு ஏழை விவசாயி ஒருவர், அவரிடம் உதவி கேட்டு வந்தார்.அய்யா வீட்டில் யாரும் இருக்கீங்களா? எனக் கேட்டுவிட்டு வெளியில் நின்றுகொண்டு இருந்தார்.உள்ளே அவருடைய மனைவி சமையலறையில் ஏதோ வேலையை முடித்து விட்டு வந்தார்.  வெளியில் நின்றவரை வாங்கய்யா என அழைத்து குடிக்க மோர்கொடுத்தார். வெகுதூரம் நடந்துவந்த களைப்பிற்கு மோர் கிடைத்தது அந்த பெரியவருக்கு மகிழ்ச்சியாக இருந்தது.        அய்யா என்ன விசயமாக என் வீட்டுக்காரரைப் பார்க்க வந்தீர்கள் என கேட்டார். அதற்கு அந்த பெரியவர் தான் செய்த விவசாயத்தொழிலில் மிகவும் நஷ்டமடைந்துவிட்டதாகக் கூறினார். பிறரிடம் கடன் வாங்கி பயிர் செய்ததாகவும், அது இப்போது இரண்டு மூன்று மடங்காக மாறிவிட்டது என்று கூறினார்.அதனால் எனக்கு கடன் கொடுத்தவர்கள் கடனைத்திருப்பித்தரும்படி கேட்க்கின்றனர். ஆனால் என்னால் இப்போது அவர்களிடம் பெற்ற கடனைத் திருப்பிச்செலுத்த முடியாத சூழ்நிலையில் இருக்கிறேன். தேவராசிடம் சொல்லி ஏதாவது உதவமுடியுமா என கேட்டுவிட்டு போகலாம் என்று வந்தேன் என கூறினார்.                                                 [தொடரும்]