வியாழன், 18 நவம்பர், 2021

ஆசிரியர் தின விழா – கவிதைத்தொகுப்பு


ஆசிரியர் தின விழா – கவிதைத்தொகுப்பு



அறப்பணியாம் ஆசிரியப்பணியை சீருடனும் சிறப்புடனும் ஆற்றிக்கொண்டிருக்கும் நமது பேராசிரியப் பெருமக்களுக்கு நம் மாணவர்கள் சார்பாக ஆசிரியர் தின விழா வாழ்த்துக்களை தெரிவித்துக்கொண்டு, இந்த கவிதைத் தொகுப்பை சமர்ப்பிக்கிறேன்.

கல்வி ஆசான்களை அடையாளப்படுத்தும்
அற்புதத் திருநாள் இந்த
ஆசிரியர் தின நாள்..

ஆசிரியர்களின் நல் ஆசானாய்த் திகழும்
டாக்டர் ராதாகிருஷ்ணனின் பிறந்த நாள்
இந்த ஆசிரியர் தின நாள்..

வந்தனம் செய்வோம் நல்
வந்தனம் செய்வோம்
கல்வி மூலம் வாழ்க்கைக்கு நல்
வழி கர்றுத்தந்த ஆசான்களுக்கு
வந்தனம் செய்வோம்..
நின்ற இடத்திலே நின்று
நித்திய சத்திய புத்திய
போதனைகளைக் கற்பித்து
வெற்றியின் உச்சத்தைத் தொட
வேதனைகளையும், சோதனைகளையும்
துச்சமென மதித்து
சாதனை, சரித்திரம் படைக்க
சூத்திரப் பாடம் கற்றுத்தரும்
ஆசான்களை வந்தனம் செய்வோம்..
கலைகள் யாவும் கற்றுத்தந்து
கட்டிக்கரும்பு சாறுபிழிந்து
பாடங்களை பாங்கோடு பருகச்செய்யும்
புத்திரர்களான நம் ஆசான்களை
வந்தனம் செய்வோம்..
சிந்திக்க மறந்த மனங்களை
உள்ளன்பு உவகையோடு தட்டியெழுப்பி
கல்வி தானம் தரும் நம்
ஆசான்களை வந்தனம் செய்வோம்..
ஐந்தில் வளையாததை அகவை
முப்பதிலும் வளைத்து நெளித்து
தங்கத்துகள்களால் புடமிட்டு
மிளிரச்செய்யும் மந்திரம் தெரிந்த நம்
ஆசான்களை வந்தனம் செய்வோம்..

கல்வி பிறருக்கு கொடுப்பதால்
என்றுமே குறைவுபடாது என்ற
ஒளவைப் பாட்டியின் ஓதலை உணர்ந்து
உவப்புடனே உள்ளங்களைத் தொட்ட நம்
ஆசான்களை வந்தனம் செய்வோம்..

இக்கவிதைத் தொகுப்பு வெறும்
வார்த்தை ஜாலங்களுக்காக எழுதவில்லை
மாணவர்களாகிய எங்களுக்கு நல்வழிகாட்டும்
உங்களை இந்த ஆசிரியர் தின நாளில்
புகழ்வது தகும் என்பதாலே..

2 கருத்துகள்:

  1. நல்லது தங்கள் ஆசிரியர்க்கு மறக்காமல் குரு தட்சனை செய்துவிட்டீர்கள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஐயா அவர்களுக்கு , என் வலபைப்பதிவிற்கு வந்ததற்கு நன்றி.குருவை மறந்தால் அவன் மனிதனே இல்லை..

      நீக்கு