வியாழன், 10 செப்டம்பர், 2015

திருவள்ளுவர்

திருவள்ளுவர்

இரண்டடி ஆசான்
இருந்தான் அன்றொரு நாள்
ஏழடி சீர் படைத்து மானிடத்தை
ஏற்றம் பெறச் செய்தான்
தாடியுடன் வார்த்தை
வேள்விகளைச் செய்து
மனித மனங்களை
கசக்கிப்பிழிந்த
கொல்லன் அவன்
அறம் பொருள் இன்பம்
என்ற மூன்று இயலையும்
குறையாத சுவையோடு
பந்திவைத்தப் பகுப்பாளன்
ஏடில்லா காலத்திலே
எழுத்தானி கொண்டு
ஓலைச்சுவடியில்
வரிகளை வடித்த
வார்த்தை வித்தகன்…
அரசலையும், புரசலையும்
அரசியலையும், அறிவியலையும்
அன்றே அறிவுக்கு கிட்டச் செய்த
ஆய்வாளன் அவன்…
வள்ளுவனைப் பெற்றதால்
பெற்றதே புகழ் வையகமே என
புதுவைக்குயில் புதிய சரித்திரம்
படைத்த சிம்ம சொப்பனமே…
காலங்களைக்கடந்து  நிற்கும்
கருத்து குவியல்களை
கண்ணோடு ஒத்தியெடுக்க- இரு

கண்களும், கரங்களும் போதாதே…

2 கருத்துகள்: