திங்கள், 28 செப்டம்பர், 2015

பெண்களின் முன்னேற்றம்

பெண்களின் முன்னேற்றம்

 

பெண்கள் நம் நாட்டின் கண்கள்..

பெண்களை மதித்து – மனப்

புண்களை அழிப்போம்..

 

பட்டங்கள் ஆள்வதும் சட்டங்கள் செய்வதும்

பாரினில் பெண்கள்  நடத்த வந்தோம் என்ற

புரட்சிக்கவிஞனின் பொன்னான வரிகள்

பலித்தது இந்தப் பாரினில்..

 

அடுப்பூதும் பெண்களுக்கு

படிப்பெதற்கு என்ற காலம் போய்

உலகை ஆளப்பிறந்தவர்கள்

பெண்கள் என அவையம் அனைத்தும்

அறியச்செய்தவர்கள்..

 

இப்பூமியில் பிறக்கும் போதே

பெண்கள் புரட்சியாளராகவே பிறக்கிறார்கள்..

பெண்களுக்கு இரு மனம்

ஒன்று பூக்கடை மற்றொன்று சாக்கடை

எனச்சொல்வதைக்  கேட்டிருப்போம்

ஆனால் இன்று

பெண்கள் பிறக்கும் போதே

சாதனை, சரித்திரம் படைக்கவும்

பூவும் புயல் வீசும் எனக்காட்டவும்

விதையிட்ட இடத்திலே விருட்சமாகவும்

விளக்கொளியில் மடியும்

விட்டில் பூச்சிகளாக இல்லாமல்

விடியலைத்தேடும்

வின்மீன்களாகவுமே பிறக்கிறார்கள்..

 

பெண்ணடிமை பேணிய விஷவித்தகர்கள்

வீழ்ந்தொழிந்தனர் என

பாருலகை ஆளவந்த பெண்களுக்கு

புத்துணர்ச்சி தருவோம்..

 

ஏழு பருவ மங்கையரான

பேதை, பெதும்பை, மங்கை,

மடந்தை, அரிவை, தெரிவை,

பேரிளம்பெண் என அனைவரையும்

ஏற்றம் பெறச்செய்வோம்..

 

ஆடவரின் ஊனக்கண்களில் உள்ள

துரும்பை அகற்றி

ஆணுக்கு நிகர் பெண்களே என்ற

மந்திரச்சொல் அறிவோம்..

 

மேலே எழுதப்பட்ட கவிதைப்படைப்பு எனது சொந்த படைப்பு எனச்சான்றளிக்கிறேன். இதற்கு முன் வெளியானது இல்லை.வெளியாகும் வரை பிரசுரத்திற்கு அனுப்பமாட்டேன் எனச்சான்றளிக்கிறேன்.


5 கருத்துகள்:

 1. வணக்கங்க உங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன்.
  நான் புதுவை இல்லைங்க.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தஙகளின் வருகைக்கு மிக்க நன்றி. என்னுடைய வலைப்புக்களை படித்து கரித்துக்களைத்தர அன்போடு வேண்டுகிறேன்..

   நீக்கு
  2. உங்களின் கவிதை மிகவும் பயனுள்ளதாக இருந்தது நன்றி

   நீக்கு
  3. தங்களின் வருகைக்கு மிக்க நன்றி. தாங்கள் யார் என்று தெரிந்துகொள்ளலாமா?

   நீக்கு
 2. என்னுடைய வலைப்பக்கத்திற்கு வந்து கருத்து தெரிவித்தமைக்கு நன்றி. தங்கள் யார் என்று அறிமுகம் செய்தால் நன்றாக இருக்கும்.

  பதிலளிநீக்கு