திங்கள், 2 ஆகஸ்ட், 2021

எ ன் தா ய் மொழியாம் தமிழ் மொழிக்கு

எ ன்  தா ய்  மொழியாம் தமிழ் மொழிக்கு 




செந்தமிழ் தாய் மொழியாள் – நம்
செவ்விதழ் வாய் மொழியாள்
சிந்திய தேன் மொழியாள் – நம்
இந்திய தேசத்து செம்மொழியாள்..

மூலமொழிக்கு முதல் மொழியாம் – நம்
முத்தமிழ் செந்தமிழ் தனி மொழியாம்
முத்துக் குளித்த முதல் மொழியாம் –நம்
மூத்தோர் மூதுரைத்த இன் மொழியாம்..

அகத்தியன் முதலாய் தொல் காப்பியன் ஈறாய்
ஆயிரம் பாவலர் புனைந்த நல் நாற்றாய்
இலக்கணச் சுவையோடு நற்குணம் ஏற்றாய்
உள்ளம் பெரிதுவக்க அடியார்க்கு ஈந்தாய்..

உந்தி முதலா முந்திவளி தோன்றி
உயிர்முன் மெய்யாய் மெய்முன் உயிறாய்
ஒற்றுமுன் பகுதி விகுதி சந்தியாய் தெளிந்த
நல்பதம் சேர்க்கும் கண்மனியாள்..

அகம் புறம் நானூறும் அடக்கி
தொண்ணூற்று ஆறு சிற்றிலக்கியமும்
பதினெண் கீழ்மேல் கணக்கென
பொழிந்த நற்றமிழ் கண்மனியாள்..

தமிழின் மீது தணியாத தாகம் கொள்வோம்
தரணியில் சிறந்தது தமிழென மொழிவோம்
தமிழால் தமிழ்க்குடி தழைக்கு மென்போம்
தமிழே உயிர் மூச்செனக் கொள்வோம்..





கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக