வியாழன், 9 செப்டம்பர், 2021

இளைஞனே எழு


                   எழு இளைஞனே...          



இளைஞனே …
இன்னுமா உறங்குகிறாய்…
இதயங்களை இலகுவாக்க                    
இன்பங்களை சுவைக்க
இன்புற்ற இதயத்துடனே
இன்னல்களையும்,
இடர்பாடுகளையும்
இடித்தெரிந்து
இடுக்கன் இடும்பை
இனி இல்லை என
இசைந்து எழுந்து வா இளைஞனே..

சோம்பேறிகளின் உலகமிது..
சுறுசுறுப்பான உனக்கு
சங்கடங்களும், சோதனைகளுமே
சிகரங்களின் உச்சமாய் உள்ளன..

எந்த சவால்களையும் துடிப்புடன்
சந்திக்கும் சாதனையாளனல்லவா நீ..
எதிரிகளின் முகத்திரைகளைக் கிழிக்க
இனியென்ன தாமதம்..

இளைஞர்களின் இதயத்தில்
உறங்கி கிடக்கும் உன்னதமான
அறிவாற்றலை அள்ளியெடுக்க
இந்த உலகமே தவமிருக்கிறது..

இந்த எண்ணம் பலருடைய ஆறாப்பசி..
எள்ளி நகையாடிய நரிக்கூட்டத்தின் நடுவில்
நங்கூரமாய் அசைக்கமுடியாத் திலகமிட்டு
வாழ்வின் ரசனையை ருசிபார்க்க
விரைவாய் வா இளைஞனே..

குலத்தையும் கோத்திரத்தையும் மறந்து
குறைவுள்ள மனங்களை களைந்து
குவலயமும் பெருமைபட வாழ்ந்து
குன்றின் மீது வெற்றிக்கொடி நீ ஏந்து..

அக்கினிச்சிறகுகள் வார்த்தெடுத்த தங்கங்களே
அடுத்த செயலை வெற்றியுடன் ஆற்ற
அரும்புகளாக முளைத்த என் பாச மொட்டுக்களே
அன்புடனே அரவனைக்க இந்த பூமி காத்திருக்கிறது
அசரா நம்பிக்கையுடன் துள்ளி வா இளைஞனே..

வேரறுந்த விழுதுகளையும்
வெட்கிக்குனிந்த நாளிகைகளையும்
வேதனையில் புழுங்கிய மனங்களையும்
விரட்டியடிக்க
வீரமுள்ள நெஞ்சினாய் வா இளைஞனே…

A.Joseph Jeyabal
s/o D. Arockia samy
21a/4-17- Joseph colony
Y.M.R. Patti, Dindigul-624001.
Cell:9698433326

Email: ajjeyabal1982@gmail.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக