வியாழன், 9 செப்டம்பர், 2021

தீபாவளி திருநாள்

                                                                தீபாவளி திருநாள்


  மகிழ்ச்சி தீபங்கள் ஒளிர
  தீப ஒளியாம் தீபாவளித் திருநாள்..
  நெஞ்சத்தில்  இகழ்ச்சியை மறந்து
  புகழ்ச்சிப் பூவை ஒளியாக
  நம் மனங்கள் சுமக்கும் நன்னாள்..
  
  எரிகின்ற தீபங்களின்
  எண்ணமும் ஏக்கமும்..

  எல்லா நாழும்
  எங்களை தீபங்களாக
  ஏற்றுகின்றீர்கள்..
  என்றாவது ஒரு நாள்
  நீங்கள் யாருக்காகவாவது
  உங்களை நீங்கள்
  எரிகின்ற தீபங்களாக
  ஏற்றியிருக்கிறீர்களா?
  
  அடுத்தவரை அனையாத்தீயில்
  இட்டு கொளுத்துவது
  மனிதருக்கு எத்துனை இன்பம்?

  மானிடமே
  என்னைப் பார்த்துக்
  கற்றுக்கொள்ளுங்கள்..
  வகைகளில் நான்கு..
  விளக்கு, என்னெய்
  திரி,  தீ என..
  நால்வரும் இனைந்து
  உங்களுக்கு ஒளியைத்தருவது  போல்
  நீங்கள் ஏன்
  உடனிருப்பவருக்கு உதவ
  மறுக்கிறீர்கள்..
  
  தன்னலம் கருதாமல்
  தீயில் கருகி திரியான நான்
  உங்களுக்கு ஒளியைத் தருகிறேனே?
  பிறருக்காக உங்களை
  நீங்கள் உருக்க
  மறுப்பதேன்?
  
  என்னைப் பெருமைப்படுத்துவதாகச் சொல்லி
  எல்லாரும் புத்தடை உடுத்தி
  இனிப்புகள் உண்டு
  எனை மறந்து
  நீங்கள் மட்டும் மகிழ்வதேன்?
   
  எரிகின்ற தீபங்களை ஏற்றி
  ஒளியேற்றினால் மட்டும் போதுமா?
  இருட்டில் இருக்கும்
  உங்களின் மனங்களை
  என் ஒளிக்கு கொணர்வது எப்போது?

  விளக்கு எற்றி
  விருந்து படைப்பதாலே
  தீபாவளித்திருநாள்
  திருப்தி அடைந்து விட்டது
  என நினைத்து விடாதே..

  கும்மிருட்டில் வாழும்
  குருட்டு சமுதாயத்தை
  வீதியில் எரியும்
  வெளிச்சத்திற்கு கொண்டுவர வேண்டும்..

  குலம் கோத்திரம் என்ற
  கொடுமைகளை களைந்து
  மனிதன் மட்டுமே
  மீதியான ஜாதியென
  மனதார ஒப்புக்கொள்ள
  இந்தப்  பேரொளித்திருநாளாம்
  தீபாவளித்திருநாளைக்

  கொண்டாடி மகிழ்வோம்..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக