நதியின் நாதம்
நதியின் நாதம்ஓடுகின்ற நதிக்கு
ஓடையின் வழியே ஓதியது யாரோ? நதி பிறந்தது நந்தவனத்தில் நாங்கள் வாழ்வது அந்த வனத்தில் நதியின் நாதமும் அடியும் நலன்கள் யாவும் பொழியும் கரைதோறும் நதியின் நுரை அரும்பும் குழவிகூட கொஞ்சும் அமுதம் களிறு கூட கெஞ்சும் கமுகம் சாதக சூத்திரங்களுக்கு நதியொரு அடி -என்று சூசக சொல்லொன்றை கதியென்று நீ படி கதிக்கும் யாவுன் கதியாகுமோ? கற்பனைக்கு அது ஈடாகுமோ? நதிக்கொரு கீதம் பதிக்கொரு கீதம் கதிக்கொரு கீதம் சதிக்கொரு கீதம் சாதிக்கொரு கீதம் வீதிக்கொரு கீதம் வீட்டுக்கொரு கீதம் நதி வாழும் நாளெல்லாம் -நம் நாடும் வாழும்
வணக்கம் நண்பரே! கவிதை மிக அருமை! கவிதைக்கு தகுந்த படங்களையும் இணைத்தால் இன்னும் அழகாக இருக்கும்! நன்றி!
பதிலளிநீக்குதற்சமயம் இது மட்டும் போதும் என்பதால் போட வில்லை.. மற்ற பதிவின் போது கட்டாயம் பதிவு செய்கிறேன்..
நீக்கு